பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 நாச்சியப்பன் கவினுற்ற திருவாழ்வில் பெண்ணுெ ருத்தி கைப்பிடித்துக் காதல்செய்யும் இன்ப மான புவிமீதில் கற்பனையாய் உறுப்பு மாற்றிப் போற்றிசெயும் ஆண்டவனைக் காத லித்தால், செவிகுளிர, வாய்குளிரப், பாடிக் கேட்டுச் சென்றிடலாம் என்ருலும் உள்ள மெல்லாம் குவிகின்ற இன்பத்தைக் காண்ப துண்டோ? கூத்தாட்டம் வாழ்வாமோ? சிந்திப் பீரே! எல்லாமும் துறந்தவர்கள் என்று சொல்வி இல்லத்தைத் துறந்து நடுக் காட்டில் சென்று வல்லார்போல் தவம்செய்வார் மனத்தி னுள்ளே வந்துறுத்தும் ஆசையினை அடக்க மாட்டார்! தில்லானப் பாடிவரும் விறகுக் காரி தேம்பியழக் கூடிடுவார்; ஆசை தீரப் பொல்லாங்கு செய்திடுவார்; இல்வாழ் வெண்ணுர்; புலம்பியவள் உயிர்நீத்து மானங் காப்பாள்! புல்லுண்ணேன் புலியானேன் என்று சொல்லிப் புலித்தோலை யணிந்திருக்கும் மாடு மீட்டும் புல்லுண்ணச் செல்லுதல்போல் துறவு பூண்டு புலித்தோலை யணிந்தவரும் காமங் கொள்வார்! வில்லுடனே புதர்மறைந்து புள்ளி னத்தை வீழ்த்துகின்ற வேடன்போல் துறவு பூண்டு புல்லுடலில் காவியுடை போர்த்த தீயோர் பூவையரைக் கெடுத்திடுவார்; விழிப்பு வேண்டும்! காதலிலே தோற்றவரும்; இன்ப வாழ்க்கை காண்பதற்கே எளியவழி தேடு வோரும்: பூதலத்தே உழைப்பின்றி உண்ப தற்குப் பொருத்தமுள்ள வழிதேடித் திரிந்த பேரும்,