பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 185 மாதொருத்தி யுடன்சேர்ந்து வாழு கின்ற மனமின்றிப் பலபேரை யெண்ணு வோரும், கூதலுக்கு நெருப்பெனவே ஒண்டு கின்ற கொள்கையுடன் துறவிகளாய் மாறு கின்ருt! செய்கையிலே மெய்யில்லை; நினைப்புக் கொள்ளும் சிந்தையிலே உண்மையில்லை; நாளும் நாளும் தெய்வமெனக் கூவிடுவார்; வாய்மை யில்லை. சிறப்பான போக்கெதுவும் காணற் கில்லை! வைகையிலே நீராடிக் காவி கட்டி வந்திடுவார் உடலெங்கும் பூச்சுப் பூசி பொய்மைக்கே சான்ருகத் தோன்றி யிந்தப் பூவுலகில் திரிந்திடுவார், நம்ப வேண்டாம்!