பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 தாச்சியப்பன் காதற் சோலை பேசிக் கொண்டே வழிநடந்தோம் பெண்ணும் ஆணும் கைகோர்த்து ஆசை தீரத் தென்றலிலே ஆடிப் பாடி மிதந்தபடி வீசும் இன்ப நறுமணத்தின் விந்தை தன்னில் திளைத்தபடி பேசிச் செல்லும் அழகுடைய பெரும் பூஞ் சோலை வந்தடைந்தோம். கொடிகள் மரத்தை வளைத்திருக்கும் குண்டு மல்லி மலர்ந்திருக்கும் செடியில் மலர்ந்த பூவினிலே சென்று தும்பி தேன்குடிக்கும் அடிகள் பட்ட இடமெல்லாம் அழகிய பச்சைப் புல்லிருக்கும் நெடுநற் காற்றின் மணமெங்கும் நிறைந்தி ருக்கும் பூஞ்சோக்ல. மரத்தின் கிளையில் புருவிருக்கும் மற்றதன் கீழே மானிருக்கும் அரண்டே ஓடும் பெட்டையினை அடையப் பறக்கும் ஆணினமே இரண்டி ரண்டே எங்கனுமே இணையும் துணையும் எங்கனுமே மருண்ட விழிகள் இன்பத்தில் மலரும் காட்சி தருஞ்சோலே