பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 187 வாளும் வேலும் எனத்தோன்றி வடிவில் அழகிய மீனகி நாளில் மலரும் பூவாகி நல்லின் பந்தரும் கண்ணுடையாள் ஆளன் மேலே சாய்ந்தபடி அல்லிக் கொடிபோல் கிடந்திடுவாள் பாளை பிளந்த சிரிப்பினிலே பதிந்து கிடப்பான் ஆணழகன். காளை யொருவன் தோன்றிடுவான் காதல் மங்கையைத் தேடிடுவான் நீளும் புருவம் காதளவாய் நிற்கும் இன்பச் சேயிழையின் தோளொடு தோளைப் பின்னிடுவான் துவளும் இடையைத் தாங்கிடுவான் மீளச் சிரித்து நடந்திடுவார் மின்னித் திகழும் பூஞ்சோலை. எங்கு நோக்கினும் காதலர்கள் இணயிணை யாகச் சென்றிடுவார் தங்கும் புன்னகை ஒளிதனிலே தகத்தக என்னும் பூஞ்சோலை அங்கும் இங்கும் என்கண்கள் அழகே கண்டன என்செய்வேன் பொங்கும் காதல் என்னிலுமே பூரித் தெழும்பி விம்மியதே. சொற்களில் அழகைப் பூசிடுவேன் சொக்கத் தங்கம் ஆக்கிடுவேன் மற்றப் படியென் கவிதையிலே மனத்தைக் கவர்வது நீயன்றே