பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நாச்சியப்பன் என் னும் பகுதியும் இதனை உணர்த்தும். குந்துதல் (24, 70, 79. ) குட்டை மனிதர் (135) மின்னல் இடைச்சி (146) போன்ற சொல்லாட்சிகனில் பாவேந்தரைக் காண்கிறோம். :பகலவன் வரவு (87) மழை (90), "அழகுமங்கை (100) ஆகிய பாடல்கள் பாவேந்தரின் அழகின் சிரிப்புப் பாடல் களோ என்று ஐயுறுமளவிற்கு ஒத்திசைக்கின்றன. சேசு பொழிந்த தெள்ளமுது’ எ னு ம் பாவேந்தரின் பாடலுடையை வெல்லத் தமிழ்காக்க வேங்கையெனப் போராடு (82), மதவெறிக்குப் பலியானார் (215) ஆகிய இரு பாடல்களும் அணிந்திருக்கின்றன. "உடல் தளர்ந்து முதுமையுற்றுக் கிழவி யாகி உடனிருக்கும் மனைவிக்கும் உள்ளம் உண்டு நடப்பதற்கும் முடியாது படுக்கை மீது நலிவடைந்து கிடக்கின்ற போதும் அன்புத் தொடர்பிருக்கும் மணவாளன் அருகி ருக்கும் து.ாயநினைப் பெழும்போது மனங்க ளிக்கும் கடற்கரையும் முழுநிலவும் தென்றல் காற்றும் கருத்தினிலே புகுந்தின்பம் மிகுத்துக் காட்டும்!" (170) எனும் பாடல் குடும்ப விளக்கு முதியோர் காதலின் பிழிவாகவே அமைந்துள்ளது. சஞ்சீவி பர்வதச் சாரலின் வஞ்சி தந்த முத்தமும், எதிர்பாராத முத்தத்தில் கொண்ட ஈடுபாடும் முத்தம் (154), கட்டி முத்தம் (155) ஆகிய பாடல்களைப் பாடப் பாவலரைத் தூண்டியிருக்குமோ? இவ்வாறு பாவேந்தரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ள இப்பாவலர் அவரிலிருந்து ஓரளவு மாறுபடவும் செய்கிறார். பாவேந்தர், 'மங்கை யொருத்தி தரும் சுகமும் எங்கள் மாத்தமிழுக்கு ஈடில்லை கண்டிர்’ என்றார். இவரோ,