பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 189. முத்துப்பூங்குழலி திருமணப் பாட்டரங்கம் தலைமையுரை முத்தான முத்துப்பூங் குழலி மன்றல் முடிந்தவுடன் நடந்திடுமோர் வாழ்த்துமன்றில் சத்தான தலைமையினை ஏற்ப தற்குத் தான் வருதல் தேகுைம் என்ற ழைத்தார் முத்துப்பூங் குழலிதிரு மணத்த லைமை - முத்துப்பட் டணத்தார்க்கே பொருத்தம் என்றே ஒத்துப்பார்த் திட்டாரோ எனநி அனத்தேன் உவகையுடன் மணவாழ்த்துக் கூற வந்தேன். உலகத்து நாகரிகம் அனைத்தி னுள்ளும் உயர்ந்ததுகாண் பாரதப்பண் பென்று சொல்வார் நலமிக்க பாரதத்தும் தமிழ்ப்பண் பாடே நற்சிறப்பு வாய்ந்ததென ஆய்ந்தோர் சொல்வார் புலமிக்க தமிழ்நாட்டும் நகரத் தார்தாம் பொருளுள்ள வழக்கங்கள் கொண்டோர் என்று தலமுற்றும் சென்ருய்ந்தோர் கூறு கின்ருர் தனிநாக ரிகங்கொண்டோர் நகரத் தாரே! நகரத்தார் திருமணத்துச் சடங்கெல் லாமே நம்பழமைச் சிறப்புகளை உணர்த்தி நிற்கும் சிகரத்தில் ஏறிவிட முயன்ற தன்றிச் செட்டிமக்கள் என்றேனும் தாழ்ந்த தில்லை மகரத்தைக் கொடியாகக் கொண்ட பாண்டி மண்டலத்தில் வாழ்கின்ற நாட்டுக் கோட்டை நகரத்தார் வரலாறு தமிழர் நாட்டின் நாகரிக வரலாற்றின் பகுதி யாகும்.