பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாச்சியப்பன் முயற்சியுடன் உழைப்பிருந்தால் உயர்ந்து வாழ முடியுமென நிலைநாட்டும் நம்ஊ ரெல்லாம் வயற்சரிவில் காணுகின்ற வாய்க்கால் முற்றும் வறண்டிருக்கும் பெரும்பாலும் வானம் பார்த்துப் பயிர்க்குலங்கள் வளர்ச்சிபெறக் காத்தி ருக்கும் பார்க்குமட்டும் முட்புதரே செழித்தி ருக்கும் தயக்கமின்றி இந்நிலத்தில் வாழ்ந்து காட்டும் தனவணிகர் வரலாறு முயற்சிக் காதை! வரலாற்றுச் சிறப்பாலே உயர்ந்தி ருக்கும் வாழ்வுடைய நகரத்தார் திரும ணத்தில் மரபுவழி நடக்கின்ற வழக்கம் கூறி மாண்புகளே நிலைநாட்டக் கவிஞர் ஐவர் வருகைபுரிந் திருக்கின்ருர், கவிதை பாடி மலர் வாழை விருந்துதாலி சந்த னத்தின் பொருள்விளக்கம் கூறியிங்கே நம்மை யெல்லாம் பூரிக்கச் செய்திடுவார் வாழ்க நன்றே! கசப்பென்ற சொல்லிங்கே வெறுப்பைக் காட்டும் கரிப்பென்று மொழிந்தாலே சலிப்புத் தோன்றும் துவர்ப்பென்று சொல்லமுகம் தொங்கிப் போகும் உறைப்பென்று சொன்னலே காட்ட முண்டாம் புளிப்பென்ருல் முகஞ்சுளிக்கும் மனித ரெல்லாம் பூரிப்பார் இனிப்பென்று புகன்ற போதே! அளிக்கின்ற விருந்தினிலே இனிப்பா போதும்? அறுசுவையும் சேர்ந்திருக்க வேண்டும் அன்ருே? அதளுல்தான் விருந்துகளில் எண்ணி எண்ணி அறுசுவையும் படைக்கின்ற வழக்கம் கண்டோம் எதிலும்ஒரு புதுமையினே விழையும் நெஞ்சம் இருக்கின்ற காடப்பர் தமது வீட்டில்