பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 193 தாலி-அழ. அண்ளுமலை புலிப்பல்லைத் தட்டிவந்து கழுத்தில் கட்டிப் பூவையரை மணந்தார்கள் அந்தக் காலம் எலிப்பல்லுக் கஞ்சிமருந் துளசி போட்டே இறங்காமல் நஞ்சகற்றல் இந்தக் காலம் கலப்பில்லாத் தனித்தமிழில் சுவையைக் கூட்டிக் கவிதையெனப் புலவர் அண்ணு மலையார் இங்கே சலிப்பில்லை எனும்படிக்குத் தருவார் நாமும் தாலிபற்றி அவர்கருத்தை அறிந்து கொள்வோம்! சந்தனம்-மா. கண்ணப்பர் வீசுகின்ற தென்றலினல் உடலுக் கின்பம் விரிகின்ற முல்லையினுல் நாசிக் கின்பம் பூசுகின்ற சந்தனத்தால் இரண்டும் இன்பம் பொருந்துகின்ற தன்மையினைக் கண்டோம் அன்ருே? ஆசுகவி போல்விரைந்து பாட வல்ல ஆசிரியர் கல்லூரித் தமிழ்த் தலைவர் நேசமிகு கண்ணப்பர் கவி மணத்தில் நிச்சயம்தம் உளத்துக்கும் இன்பம் ஆமே! தா-13