பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 தாச்சியப்பன் ப ா ர தி ய | ர் வெட்டரிவாள் போல்முறுக்கி விட்ட மீசை விழிகளிலே ஒளிபெருக்கும் வீரப் பார்வை கட்டற்ற உரிமைதனை விரும்பும் நெஞ்சம் கற்பனையில் நனைந்ததமிழ் பாடும் செவ்வாய் சட்டைக்கு மேல் பழைய கோட்டு மற்றும் சரிகையின்றித் தலைமேலே சேரன் போலே கட்டிவைத்த தலைப்பாகை இதுதான் அந்தக் கவியரசன் பாரதியின் தோற்றம் கண்டீர்! நீருக்குள் விளக்கெரியும் விந்தை யான நிகழ்ச்சிதனைக் கதைக்கின்ற புலவன் அல்லன், பாருக்குள் தான்பிறந்த நாட்டில் உள்ளார் படுந்துயரம் தனக்கண்டான். வளமி ருந்தும் சீருக்கும் சிறப்புக்கும் இடமில் லாத திருநாட்டின் அடிமைநிலை கண்டான். யாண்டும் வீரக்கும் மாளமிட்டுத் தன்தாய் நாட்டார் விளங்கும்நாள் தனக்கொணர முயன்ற வீரன்! கலிங்கத்தை வென்ருராம் கண்ண கிக்குக் கல்சுமக்க வைத்தாராம். இமய மீது புலிபொறித்து வந்தாராம், புகழ்கொண் டாராம். புலவரெல்லாம் கதைக்கின்ருர், அணுவு மின்று வலிவில்லை தாய்நாட்டின் மக்க ளென்போர் வாலறுந்த குரங்குகளாய் மாற்ருன் ஆட்சி வலைப்பட்டுச் சிதையும்நிலை கண்டான். இந்த வாழ்வுநிலை மாருதோ என நி னைத்தான்.