பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 நாச்சியப்பன் என்னேஇவ் வாழ்க்கைபெரும் மாய மென்றே இன்னொருவர் கடவுள்களின் லீலை யெல்லாம் தன்னேரில் லாதசெந் தமிழிற் பாடித் தாம்பெரிய புலவரெனத் தருக்கிக் கொள்வார்! ஒருநாட்டின் நாகரிக வளர்ச்சி தன்னை உணர்த்துகின்ற கண்ணுடி இலக்கி யந்தான் பெரும்புலவர் பலருமிதை மறந்தார். ஈசன் பெருமைகளைப் பாடுவதே தொழிலாய்க் கொண்டார். அரும்புலவன் பாரதிதான் பிறந்த நாட்டின் அவலநிலை சித்திரித்தான் இடித்துக் காட்டித் 'திருநாடே விழித்திடுக’’ எனும்பு ரட்சித் தேன்மொழியைச் செவிகுளிரப் பாய்ச்சி விட்டான். உழக்குக்குள் கிழக்கென்ற வாறே யிங்கே ஊரெல்லாம் வெள்ளையருக் கடிமை யான இழுக்கிருக்கும் போதுயர்ந்த சாதி என்னும் இறுமாப்பும் நிலைத்ததுவே சிலரி டத்தில், முழக்கினர் இழிசாதி மக்கள் எங்கும் முன்வரக்கூ டா தென்றே!' எதிர்மு ழக்கம் முழக்கினன் பாரதிதான் 'இந்த நாட்டின் முடிமன்னர் யாவருங்காண்' என்று ரைத்தே! பாரதிதன் தாய்நாட்டின் மீது வைத்த பற்றிற்கோர் எடுத்துக்காட் டுரைப்பேன் கேளிர்! "சீரியான் தமிழ்நாட்டுப் பெண்ணைத் தோற்கச் செய்யும்.அழ குடையாள் இன் ைெருத்தி யென்று கூறிடினும் உளம்பொறுப்ப தில்லை யென்று கூறினன் உயர்கவிஞன் அவனே யன்ருே? கூறியதும் வீறுதனை உளப்ப டுத்தும் கொள்கையின லன்ருேசெந் தமிழ்நாட் டாரே!