பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 197 உரிமையினே முழுமையுற அடைய வேண்டின் உணர்வடைய வேண்டுமிந்த நாட்டு மக்கள் சரியான உணர்வுபெற வேண்டு மென்ருல் சற்றேனும் மடமையச்சம் கூடா தன்ருே? புரிந்துகொண்டான் பாரதிதான் அச்சந் தானே போக்கற்ற அடிமைநிலை சேர்க்கு மென்றே! வரிந்துகட்டிக் கொண்டடிமை நிலைமை போக்க வாழ்நாளைச் செலவிட்டான் புரட்சி வேத்தன்! வாழ்நாளின் பாரதியை இழந்து விட்டோம் வந்துவிட்டான் நம்முளமாம் மண்ட பத்தில் வாழ்கின்ருன்! வீரத்தை வெற்றி தன்னை வாழ்வுரிமை யத்தனையும் அடைந்த நெஞ்சில் வாழ்கின்ருன்! அவன் உயர்வை எண்ணி யெண்ணி மகிழ்கின்ற பெருமக்கள் உள்ளந் தன்னில் வாழ்கின்ருன்! பாரதிதான் சாக வில்லை! வாழ்கின்ருன்! வாழ்கின்ருன்! வாழ்க நன்றே!