பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

urrt — á sér 23 "தீங்கவிதை சேந்தமிழிற் பாடி, என்றன் செவிகுளிர எழுப்புகின்ற பண்ணி லேனும் நான் கேட்க மென்மொழியால் அவள்ள முப்பும் நாதத்திற் கீடான இன்ப மில்லை!" (172) என்று இனிய தமிழ்ப் பண்ணினும் காதலியின் மென்மொழி தரும் இன்பமே மேலானது என்கிறார். அவர் இன்பத்தில் நாம் குறுக்கிடக் கூடாது. பாவலர் செட்டி நாட்டுக்காரர் என்பதைக், "கட்டிவைத்த மனைவியையே வீட்டில் வைத்துக் கடல்கடந்து பொருள் திரட்டச் செல்லு கின்ற கெட்டவொரு பழக்கத்தால் ஆண்க ளெல்லாம் கெட்டுவிட்டார்! பெண்களுக்கும் இன்ப மில்லை! வட்டிக்கு வட்டியெனப் பொருள் பெ ருக்கி வாழ்ந்தவர்கள் சொத்தெல்லாம் வைப்புக் காச்சு! தொட்டுவிட்ட மனைவிதனைத் தனியில் வைத்துத் தொலைபோகும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்!" (168) எனும் பாடல் பளிச்செனக் காட்டும். 'குறிப்பேடு", பேரேடு (119) ஆகியவற்றை அவர் குறிப்பிடுவதோடு, "நகரத்தார் வரலாறு தமிழர் நாட்டின் நாகரிக வரலாற்றின் பகுதி யாகும்.” (189) என முத்தாய்ப்பும் வைக்கிறார். பாவலர் பல கதைப் பாடல்கள் எழுதியுள்ளார். அவை முதல் தொகுதியில் ஒளிர்கின்றன. அவற்றோடு பல நெடுங்கதைகளும், சிறுவர் கதைகளும் எழுதியுள்ள இவர் சிறுகதைகள்' என்னும் தலைப்பில் (266) பாடும் போது, புதுமைப்பித்தன், அறிஞர் அண்ணா, செயகாந்தன்,