பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 199 கம்பனும் பாடி வைத்தான் கவிநயம் சொட்டச் சொட்ட என்பவர் தாமும் பொய்யே எழுதின னென்று சொல்வார்! நம்புதற் கியலாப் பாதை நடப்பதில் உள்ள கேட்டை மன்பதைக் கெடுத்து ரைத்தோன் பாரதி தாச னன்ருே? இடைக்காலப் புலவ ரெல்லாம் இறைவனைப் பாடி மெய்யாய் நடக்காத கதைக ளெல்லாம் நாடியே எழுத லானர் துடிக்காத உளந்து டிக்கத் தோன்றிய இந்தப் பாதை நடக்காமற் புதுமை கண்டோன் பாரதி தாச னன்ருே? பாரதி பாடி வைத்த பார்ப்பான எனத்தொ டங்கும் நேரிய கவிதை யெல்லாம் நினைத்தவா றழித்து விட்டார்! பாரதி தாசன் தோன்றிப் பாடிடும் புரட்சி கண்டு காரியச் சூழ்ச்சி வல்ல கயவரு மயர்ந்து போனர்! தமிழெனில் உயிரே யென்பான் தரிக்குமென் மூச்சே யென்பான் அமிழ்தெனு முணவே யென்பான் அகத்தெழு முணர்ச்சி யென்பான்