பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 நாச்சியப்பன் கமழ்ந்திடு மணமே யென்பான் கவிதையின் சுவையே யென்பான் தமிழ்க்கவி பார திக்குத் தாசனும் நானே யென்பான்! இலக்கண இலக்கி யத்தில் எதுவுமே தெரியா ராகிக் கலைக்களம் வளர்ப்போ ரென்றும் கவிருர்கள் யாமே யென்றும் தலைக்கணம் கொண்டு நாட்டில் தருக்கிடுங் கூட்டற் தன்னைத் தொலைக்கவே பிறந்த தோன்றல் பாரதி தாச னன்ருே? காதலின் தாய்மை காட்டில் கவிதையின் சுவையைக் கூட்டி மாதரின் இன்பந் தன்னை மறுத்திடும் கூட்ட மோட்டிச் சாதியு மதமு மன்பைத் தடுத்திடும் சதியைப் போக்கிப் பாதகம் வீழச் செய்தோன் பாரதி தாச னன்ருே? ஒளிந்தொரு கூட்டம் நம்மை ஒழித்திடச் செய்யும் சூழ்ச்சி தெளிந்திடச் செய்தான்! நன்மை திகழ்ந்திடச் செய்தான்! முன்னர் இழந்தநம் வீரப் பண்பை ஏற்றிடச் செய்தான்! மீண்டும் பழந்தமிழ் வாழ்வைச் சேர்த்தான் பாரதி தாச னன்றுே?