பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 201 வறுமையைக் களைந்து நல்ல வாழ்வினை நடத்து தற்கும், சிறுமையைப் போக்கி நல்ல சிறப்பினை எய்து தற்கும், பொறுமையை நீக்கி நாட்டுப் பொறுப்பினை ஏற்ப தற்கும், திறமையை யுணர்ச்சி தன்னைச் சேர்த்திடும் தாசன் பாட்டே! பாரதியும் பாரதிதாசனும் பல்லாண்டு பல்லாண்டாய்த் தமிழர் நாட்டில் பாவானம் வெறும்வெளியாய் நீலம் பூத்தே இல்லாமை நிலையெய்திக் கிடந்த போதில் எழுகதிர்போல் பாரதியார் தோன்றி வந்தார். சொல்லாண்டு நாட்டுமக்கள் நெஞ்சை யாண்டு சுடர்க்கவிகள் பலப்பலவாய்த் தோற்று வித்து வல்லாண்மை யுணர்வெழுப்பி உரிமை வேட்கை வளர்த்திந்தத் திருநாட்டை உயரச் செய்தார். வேதாந்தம் பாடுகின்ற புலவர்; தெய்வ விளையாடல் பாடுகின்ற புலவர்; மாதர் பாதாதி கேசங்கள், புகழ்ச்சி மாலை பல்லிளித்துப் பாடுகின்ற புலவர், கற்ருேர் மூதேவி வளர்ப்பானர் என்று நெஞ்சம் முறிந்திருக்கும் புலவர்பரம் பரையில் நாட்டு மாதாவைப் பாடுகின்ற சக்தி யாக மாவீரர் பாரதியார் தோன்றி வந்தார்.