பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 நாச்சியப்பன் வித்தகளும் பாரதியின் வழியில் வந்தோர் விதவிதமாய்ப் புதுப்பாக்கள் குவிக்க லானர் கத்தியின்றி ரத்தமின்றி என்ற நாமக் கல்லாரும் கவிமணியும் பாடு வோரின் சித்தத்தில் இடம்பிடிக்கும் யோகி யாரும் சிதம்பரனர் பொதுவுடைமை ஜீவா னந்தம் இத்தனைபேர் மத்தியிலும் சுப்பு ரத்னம் இணையற்ற புரட்சிப்பா வேந்த ரானர். சிறுபுலி யனையதொரு தோற்றங் கொண்டோன் சினமுழக்கம் செய்தானேல் பகை நடுங்கும் வீறுமிகு சொற்களினல் புரட்சிப் போரை விளைவிக்கும் ஆற்றலுளான் சுப்பு ரத்னம் ஏறுபோற் பீடுநடைப் பார திக்கே யான்தாசன் யான்தாசன் என்று சொன்னல் மாறுபடும் கருத்துடையார் அல்லர் என்றே மனங்கொண்டே இனங்கண்டு கொள்ள லாகும். கண்ணனையும் முருகனையும் காளியையும் கனிந்துருகிப் பாடுகின்ற பார திக்கோ எண்ணத்தில் நாத்திகமே குடிகொண் டுள்ள இச்சிங்கம் எவ்வாறு தாசன் ஆனன்? வண்ணத்துக் கவிபாடத் தெய்வ சக்தி வளமிருக்க வேண்டுமெனும் பார திக்கு விண்ணளவு கற்பனையை நாத்தி கத்தால் விரித்துரைக்கும் புலவைெரு தாச ளுமோ? பாரதியார் தெய்வீகம் போற்றி லுைம் பழமையிலே வெறுப்பு டையார்; நாடுகாக்க வீரர்களே வேண்டுமெனும் புரட்சி நோக்கர் வெறும் பஜனைக் கூட்டத்தை வெறுக்கும் சீலர்