பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 203 தேரெனினும் விரைந்தோட வேண்டு மென்னும் சிந்தனையில் ஞானத்தேர் உலாவந் தாராம் யாரிவரென் றறிந்தேதான் தாச ளுனர் அரட்டுகின்ற பார்வையுள்ள புரட்சி வேந்தர். ஏய்த்துத்தான் உயிர்வாழ வேண்டு மென்றே எவர்.முயன்று வாழ்ந்தாலும் கடிந்து நிற்கும் காய்த்தெழுந்த நெஞ்சத்தான் பார திக்குக் கனகசுப்பு ரத்தினம்தான் தாச னைன்! வாய்த்துள்ள உயிரிங்கே நாட்டுக் காக வழங்கிடலே சிறந்ததென்னும் கருத்தில் இந்தச் சேய்த்தமிழர் இருவரிலும் வேறு பாடு சிறிதுமில்லை ஐயமில்லை உண்மை காணிர்! பாரதத்தை ஆண்டுவந்த வெள்ளைக் காரப் பரங்கியரை ஒட்டுதற்குத் துடித்த நெஞ்சும் சீரதிக முடையதமிழ் நாட்டில் இங்கே சிலர்வாழப் பலர்மாயும் நிகழ்ச்சி கண்டு நேர்மையுடன் கொதித்ததன் மான நெஞ்சும் நிகரில்லை என்றெவரே கூற வல்லார் பாரதிக்குத் தக்கதொரு தாசன் தானே பண்புடைய கனகசுப்பு ரத்னம் காணtl வில்லாளி அருச்சுனனைப் பார திக்கு மிகப்பிடிக்கும் உயர்வீரன் என்ப தாலே சொல்லாலும் செயலாலும் வாய்மை காத்துத் தோற்ருலும் பணியாத நெஞ்சங் கொண்ட வல்லானும் இராவணனைப் பாவேந்தர் தம் வழிமுதல்வன் எனவீர வணக்கம் செய்வார் வல்லாண்மை மிக்க இரு கவிஞர் கட்கும் பகைமுடிக்கும் வீரரையே மிகப் பிடிக்கும்.