பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 தாச்சியப்பன் தலைப்பாகைச் சுடர்விழிகொள் பார திக்குத் தமிழ்ப்பெண்ணின் விடுதலையே நோக்க மாகும் சிலபோன்ற பெண்ணுக்குக் கைமை நோன்பு சிறைப்படுத்தும் கொடுமையெனத் தாசன் கூறும் அலைகின்ற இருநெஞ்சங் காதல் கொண்டே அன்பாக அணைகின்ற வாழ்வு தானே நிலையான இன்பத்தை யளிக்கு மென்று நினைப்பவர்கள் இருவருமே ஒருநோக் குள்ளார். பக்தியிலே சக்தியுண்டென் றெண்ணி னலும் பழமூடப் பழக்கத்தைச் சாடி நிற்கும் மிக்கபுதுக் கொள்கையில்ே ஊறி நிற்கும் மீசையுள்ள பாரதிக்குத் தாசன் எந்தப் பக்கத்தில் வந்தாலும் மூடப் போக்கைப் பாய்ந்தெதிர்க்கும் வெறியுள்ளான் ஆகை யாலே சிக்கென்று பாரதியைக் குருவாய்க் கொண்டான் சிங்கத்தைப் பின்பற்றும் சிங்க மாளுன்! குயில்பாட்டு பாரதிக்குப் பெருமை சேர்க்கும் கோலமிகும் அப்பாட்டுப் போற்ப டைத்த மயில்ஆடும் சஞ்சீவி பர்வ தத்தின் - மலைச்சாரல் கதைதாசன் பெருமை யாகும் மயல்சேர்க்கும் கற்பனையாம் குயிலின் பாட்டு மற்றிந்தச் சஞ்சீவி மலைக் கதையோ துயில் தீர்க்கும் பகுத்தறிவுக் கருத்து மிக்க துடிப்பான புத்தெழுச்சிக் கீதம் ஆகும்! பாஞ்சாலி சபதத்தில் புதுமைப் பெண்ணின் பகுத்தறிவு வாதத்தைக் கேட்க லாகும் நோஞ்சாளும் தருமர்தனைச் சூதில் விற்கும் முறைகேட்டை எதிர்க்கின்ற புலியா கின்றுள்!