பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20ზ நாச்சியப்பன் பாரதியார் விரும்பிய மொழி பாரதியார் கண்டமொழி என்ன வென்று பகுத்தறிய முனைந்திருந்தேன்; மொழிகள் யாவும் நேரெதிரே வந்து நின்று நீநான் என்றென் நெஞ்சுதனைத் தொட்டுரைத்த செய்தி யெல்லாம் கூறுகின்றேன் கேளுங்கள்; சிறிது கூடக் குறையின்றி அவைசொன்ன பேச்சை யெல்லாம் பாரறியச் சொல்லுகின்றேன்; கேட்ட றிந்து பயன் பெறுவீர் நலம்பெறுவீர் வாழி வாழி! கங்கையினுல் வளமுற்றுச் சிறப்புப் பெற்றுக் கவினழகு பெற்றிருந்த வங்கப் பெண்ணுள் செங்கையினை கூப்பியெனை வணக்கம் செய்தாள். 'சிறந்ததொரு தமிழ்ப்புலவா, பாரதிக்குத் தங்கை யெனை மிகப்பிடிக்கும் செல்வன் பங்கிம் சந்திரனின் தாய்நாட்டு வாழ்த்தை யன்னேன் மங்காத செந்தமிழில் மொழிபெ யர்த்து வரைந்ததனை யறியாயோ?' என்று கேட்டாள். அங்கவளைத் தள்ளிவிட்டுத் தெலுங்கு மங்கை அருகில்வந்து நின்றுகொண்டாள்; என்னைப் பார்த்தாள் 'பொங்கிவரும் தமிழ்க்கவிதைப் பெருக்கால் நாட்டில் புதுமைவளம் மிகப்புரியும் புலவா, என்றன் அங்கமெலாம் கவியின்பம்; அழகு வெள்ளம் அதுகண்டே சுந்தரத் தெலுங்கென் ருேதித் தங்கமனப் பாரதியும் எனப்பு கழ்ந்தான் தானறிய வேண்டு மென வேண்டி நின்ருள்