பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 207 குடுகுடென மற்ருெருத்தி ஓடி வந்தாள் குலுங்கியவா றென்னெதிரில் வந்து நின்ருள் மடமடென ஒரு கவிதை பாடி நின்ருள் மராட்டியப்பெண் நானென்று கூறி நின்ருள் தடதடென மலைக்காட்டில் குதிரை மீது தாவிவரும் வீரரென்றன் மைந்தர். எம்மைப் படபடெனத் துடிக்கின்ற வீர மீசைப் பாரதிக்கு மிகப்பிடிக்கும் என்று ரைத்தாள். மேற்றிசையில் ஒருகோயில் உள்ளி ருந்து மிகமுதிய பெண்ணுெருத்தி வெளியில் வந்தாள் ஆற்றல்மிகும் ஆடவரின் குரலில் அன்ள்ை 'அடதம்பி, பாரதிக்கு மிகப்பி டித்த கோற்ருெடியாள் நான்; எனது வேத நூலும் குறைவற்ற இலக்கியங்கள் அனைத்தும் அந்த நாற்கவிஞன் போற்றுவன வாகும்’ என்றே நவின்ருளவ் வடமொழியாள் கேட்டுக் கொண்டேன். சீரளவு தெரிந்தவனே இனிப்பைக் கூட்டிச் செய்யுளென வடிக்கின்ற புலவா, இங்குப் பாரெனவே கேட்டதொரு குரலின் பக்கம் பார்வையினை நான்பாய்ச்ச அழகு மிக்க கேரளத்தாள் மலையாள மொழியாள் வந்து கிறுகிறுக்கச் செய்யும்இள வடிவைக் காட்டிப் பாரதிக்குப் பிடித்தவள் நான் என்று ரைத்தாள் பச்சைமயில் போலங்கே நின்றி ருந்தாள்! சிங்களத்துப் பெண்ணெருத்தி வந்து நின்ருள் சிந்தியொடு குசராத்திப் பெண்ணும் வந்தாள் தங்கநிற ராசபுத் தானத்துப் பெண்ணும் தளிர்போன்ற கன்னடத்து மங்கை தானும்