பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2Ա5 நாச்சியட் அங்கங்கே என்னெதிரில் நின்று கொண்டே யாரழகு பாரென்பார்: மயங்கி நின்றேன் இங்கிவரில் யாரைத்தான் விரும்பி நின்ருர் இளஞ்சிங்கப் பாரதியார் எனநினைந்தே அப்போதோர் ஒளிதோன்ற முகிலி னுாடோர் அழகுமுகம் வீரத்தின் பொலிவு கொண்டே தப்பாமல் எனநோக்கி நிற்றல் கண்டேன் தமிழ்வல்லான் பாரதியென் றறிந்து கொண்டேன் அப்பாநான் சொல்லுவதைக் கேட்பாய் இந்த அழகுமிகு கன்னியருள் எவளும் என்தாய்க் கொப்பாகார்; அவளெழிலைத் தோற்கச் செய்யும் ஆற்றலிந்தப் பூமியிலே யார்க்கும் இல்லை! இப்படியோர் கருத்துரைத்தான் சிரித்து நின்ருன் எதிர்நின்ற கன்னியரோ மறைந்து போளுர் செப்படிவித் தையென்று நினைக்கு மாறே செந்தமிழ்த்தாய் அவ்விடத்தே தோன்றி நின்ருள். அப்படியே தரைவிழுந்தேன் பொற்ப தத்தை ஆர்வமுடன் பற்றிவிட்டேன் வாழ்த்துச் சொன்ன எப்பொழுதும் அவனருளென் பாலிருக்க எணவாழ்த்திப் பாரதியார் விடைபெற் ருரே!