பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நாச்சியப்பன் டி. கே. சீனிவாசன் முதலிய பலரையும் குறிப்பிட்டு இறுதியாகப் பயன்கவிதைக் கதையெழுதும் நாச்சியப்பன்' எனத் தன்னையும் சிறுகதையை வளர்த்தவர்களோடு இணைத்துக் கூறுகிறார். தனக்கு ஒன்றுமே தெரியாது அன்றோ, எல்லாமே தெரியும் என்றோ ஏமாற்றிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், தனக்குத் தெரிந்தைத் தெரியும் என்று சொல்வதற்குத் துணிவு தேவை. தகுதி மிக்க அத்துணிவு பாவலர்ச்கு இருப்பதறிந்து பாராட்டு கிறேன். 'நூல் வெளியீடு (270) எனும் பாடல் செறிவமைந்த திருப்பாடல். “அழகாக வெளியிடுக', 'தரமாக வெளியிடுக', "பிழையின்றி வெளியிடுக', 'மவிவாக வெளியிடுக’, 'பலவாக வெளியிடுக’, உணர்வுடன் வெளியிடுக', 'கலைப்படைப் பாய் வெளியிடுக'. என வெளியீட்டாளர்களுக்கு நெறிமுறை வழங்கும் இப்பாடலில், நூல் கவர்ச்சி மிக்கதாக அமைய வேண்டும்’ என்னும் கருத்தை வலியுறுத்தும்போது, 'தலைப்பிலே ஒரு கவர்ச்சி! எழுது கின்ற தமிழ்நடையில் ஒருகவர்ச்சி! படிக்கும் நெஞ்சை வலைப்படுத்தும் அச்சமைப்பில் ஒருக வர்ச்சி" (272) அமையவேண்டும் என்கிறார். இத்தொகுதியில், தலைப் பிலும், தமிழ் நடையிலும் அமைந்துள்ள கவர்ச்சியை அச்சமைப்பில் காணமுடிகிறதா என்பது ஐயமே! ஒரு பாட்டரங்கில் கேட்போரை நோக்கி "அச்சுத் தொழிலாளி யான்படும் பாட்டிதனை மெச்சிப் புகழ்விரோ, வேறாய் நினைப்பீரோ" (209) என்கிறார் பாவலர். இவ்விரண்டாம் தொகுதியை நம் முன் வைத்து அவர் கேட்கிற கேள்வியாகவே இதனைக் கொண்டு,