பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 நாச்சியப்பன் கையெழுத்துப் போட்டவரே காட்ட முகத்தோடு ஐயா பிழையாய் அடித்தீர் எனக்குதிப்பார். வாளின்றி வேலின்றி வாழ்க்கைக் களத்தினிலே நாளும் பிழைகள் அறப்போர் நடத்திவரும் அச்சகத்தான் என்ன அழைத்துக் கவியரங்க்ாம் இச்சகத்தில் சற்றே இணைந்திடலாம் வாவென்ருர். அச்சிட்டுப் புத்தகங்கள் ஆக்குமெனப் பாவேந்தாம் இச்சிட்டைப் பாடிடவே இங்கேநீ வாவென்ருர். எழுத்திற் சுவைகூட்டும் ஏந்தலினைப் பாடுதற்கே எழுத்திற் பொருள்கூட்டும் எம்தோழா வாவென்ருர் மூடத் தனத்தைத் தீதென்ருல் முட்டவரும் மாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே பூட்டவந்த ஈடற்ற தோளானை என்னுசான் பாவேந்தைப் பாடற்றேர் ஏற்றிப் பவனிவரச் செய்கின்ற இந்த அரங்கில் எனக்குமொரு பங்களிக்கச் கிந்தைகொண்ட அன்பர்க்கு நன்றி செலுத்துகின்றேன். என்ன தலைப்பிலே யான்பாட வேண்டுமெனில் சின்னஞ் சிறுவர்க்குத் தேன்தமிழில் தந்த இளைஞர் இலக்கியத்தை ஏற்றிடுக என்று தலைவர் மொழிகின்ருர், சிந்தித்துத் தான்பார்த்தேன். கோலக் குயில்போலக் கூவிப் பறந்துவிட்ட ஞாலத்துக் காசானை நான் நினைந்து பார்க்கின்றேன். நாடி துடிக்க நரம்பு முறுக்கேறப் பாடியநூல் அத்தனையும் பாரில் இளைஞர்க்கே பாரடா வையப் பரப்பை எனும்வரி யாரை யழைப்பதோ? அயராப் பணிக்குச் சிறுத்தைப் புலியே வெளியில்வா வென்ற கூரத்த குரலின் முழக்கம் எவருக்கோ?