பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 2il கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒர்கடுகாம் காதலையும் காதலினல் ஆற்றலுறும் கட்டிகளஞர் சாதலையும் எண்ணிச் சவியாத போர்க்குணத்தார் தம்மை யழைத்துத் தமக்குள்ள வேதனையைச் செம்மையுறச் சொல்லும் சிலவரிகள் கேட்டிடுவீர்! 'இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்ருனே மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்ருரே வாயடியும் கையடியும் மறைவ தெந்நாள்?’’ இப்படி யெல்லாம் இளைஞரைக் கூவியே தப்படி வைத்தல் தடுக்கும்பா வேந்தர்தாம் சூதாடித் தோற்றகதை சோதரரை மாய்த்தகதை நீராடும் பெண்கள்துகில் நீக்குஞ் சிறுகதைகள் நாட்டுச் சிறுவர்க்கு நச்செண்ணம் சேர்க்குமென வாட்டமுற்று நல்ல வழிகாட்ட எண்ணி இளைஞர் இலக்கியத்தை ஏட்டில் எழுதி எளிமைக் கிலக்கியம் ஈதெனக் காட்டினர். செந்தமிழ் நாட்டுச் சிறுமி படித்தேளும் செந்தமிழ் தன்னைப் படித்தேன் எனுமொழியும் சிங்கம் பிடரைச் சிலிர்த்து விடுதல்போல் தங்கக் கதிரவன் வருதலைச் சாற்றலும் கண்ணிர்க் குளத்தை வரைந்து மடந்தையர் எண்ணக் குமுறலே ஏந்தி வடித்தவர் தண்ணிர்க் குளத்தினைப் பாடிச் சிறுவர்க்கு வண்ணத் தமிழை வழங்கும் சிறப்பையும் குருமார் கொடுமைக் கொதிப்பை மறந்து பெருமாள் மாட்டினைப் பாடிச் சிறுவர்தம்