பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$1: நாச்சியப்வன் அன்புக் குரியதாய் ஆகிய பாவேந்தர் இன்னும் தூக்கமா பாப்பா எழுகெனக் கூவி யழைத்துக் குயிலும் மயிலும் தாவித் திரியும் குரங்குங் குதிரையும் யானையும் பாம்பும் அணிலும் குருவியும் தேனெனச் செந்தமிழ்ப் பாட்டில் வடித்திங்கு நாட்டுச் சிறுவரை நல்ல குடிகளாய் மாற்றும் பொறுப்பை மகிழ்ந்தேற்ருர் கண்டீரே. பாவேந்தர் எண்ணம் பலிக்கத் தொடர்ந்திங்கே நாமேந்து வோம்நற் பணி. கரும்புதந்த தீஞ்சாறே! கணிதந்த நறுஞ்சுளையே! கவின்செய் முல்லை அரும்புதந்த வெண்ணகையே! அணிதந்த செந்தமிழே! அன்பேl என்று - விரும்புகின்ற பசுந்தமிழை வேண்டுகின்ற படியெல்லாம் கொஞ்சிப் பின்னர் வரும்புதிய சமுதாயம் வகுத்திடவே பாவேந்தர் படைத்த பாட்டே - இளைஞர் இலக்கியம்! வான்முட்டும் இமயத்தைத் தானடக்கி வென்றிகண்ட சேர லாதன் தேன்சொட்டும் செந்தமிழாம் ஒருமொழிவைத் துலகாண்டான் என்மூ தாதை! நான்மட்டும் சோடையா என்றிளைஞர் நரம்பெல்லாம் முறுக்கி விட்டே தோள்தட்டும் சமுதாயம் தோன்றிடவே பாவேந்தர் தொடுத்த பாட்டே இளைஞர் இலக்கியம்!