பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 213 இரும்படிக்கும் பட்டறையில் இன்னிசையா கேட்டிருக்கும் ஹே ஹே என்று வரும்படிக்குப் படிக்கின்ற ஒருமொழியில் வளம்பொருந்தி இருப்ப துண்டா? கரும்படிக்குச் சுவைமிகுதி தனித்தமிழும் அவ்வாறே அதனைக் காக்க வரும்படிக்குப் பாவேந்தர் இளைஞர்களைக் கூவிவர வழைக்கும் பாட்டே இளைஞ்ர் இலக்கியம்! சதகோடித் தெய்வங்கள் புராணங்கள் சாத்திரங்கள் யாவும் கூடி மதமான பேய்பிடித்து மடங்கொண்டு சதிராடும் மக்கள் நெஞ்சில்; புதுமானந் தன்மானம் புகுத்துகின்ற மருத்துவத்தைக் கற்ற வேந்தர் பதமான செந்தமிழில் பகுத்தறிவுக் கருத்தேற்றிப் பாடும் பாட்டே இளைஞர் இல்க்கியம்! வெண்தாடி வேந்தரெங்கள் பெரியாரின் எண்ணங்கள் வெளிப்ப டுத்திப் பண்பாடி நின்றதமிழ்ப் பாவேந்தர் இலக்கியங்கள் படித்த வர்க்கு கண்பாடும் கைபாடும் கனல்கின்ற புரட்சியிலே வாயும் பாடும் மண்மூடிப் போகுமடா பழவேத சாத்திரங்கள் மடமை யோடும்! மழையில்லாப் பயிர்வாடும் மதியில்லாச் செயல்வாடும் மனத்தில் சற்றும் விழைவில்லா மணம்வாடும் விரைவில்லா மான்வாடும் விரும்பி மக்கள்