பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 நாச்சியப்பன் பிழையில்லாத் தமிழ்கற்க வில்லையெனில் நூற்கல்வி பெரிதும் வாடும் விழைவெல்லாம் செழுந்தமிழாய்ப் பாவேந்தர் இளைஞர்க்கு விரித்த பாட்டே இளைஞர் இலக்கியம்! காசுக்குப் பாட்டெழுதிக் கம்பர்.ஒரு பெருங்கவிக்கோ ஆகி விட்டார். ஆசைக்குப் பாட்டெழுதி அழகுகவி என்றுசிலர் அரங்கு காண்டார் வாசிக்கப் பாட்டெழுதிப் புதுக்கவிதை என்பர்சிலர் வார்த்தெ டுக்கும் தோசைக்கும் பாட்டெழுதிப் பாவேந்தர் தொடக்கநிலைக் கல்வி காத்தார் மூச்சுக்கு மூச்சிங்கே தமிழென்று முழங்குகின்ற பாவின் வேந்தர் ஏச்சுக்குத் தக்கசெயல் இதுவென்று தடங்காட்டி இளைஞர் தம்மை வீச்சொன்று துண்டிரண்டாய் வீழ்த்துங்கள் மதக்கருத்தை iளும் சாதிப் பேச்சொழிய பணிசெய்யப் புறப்படுவீர் சிங்கங்காள் என்ற ழைத்தார்.