பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 நாச்சியப்பன் கி ழ ச் சி ங் கம் தமிழர் தலைவர் ஈ. வே. ரா.-மூடத் தனத்தை யொழிக்கப் பிறந்தவராம்! அமைதி, ஒய்வே யில்லாமல்-என்றும் ஆடி ஒடி உழைப்பவராம்! வெண்மை யான தாடியுளார்-கொள்கை விளக்கிப் பேசும் சொற்பொழிவில் உண்மை யிருக்கும்; பயனிருக்கும்-தமிழர் உயர்வுக் கான கருத்திருக்கும்! சூதும் வாதும் செய்பவரைக்-கண்டால் துரவென் றுமிழ்ந்து தள்ளிடுவார் சாதி வெறியும் மதவெறியும்-போனல் தானே நன்மை வருமென்பார் பழக்க வழக்கம் எனச்சொல்லி-நல்ல பாதை விட்டு நடப்பதையே இளக்கம் என்று கருதிடுவார்-தாம் எண்ணிய தெல்லாம் மொழிந்திடுவார்! பழைய புராணம் படித்ததனே-நாட்டில் பரப்பு வோர்க்குப் பகையாவார் உழைப்பு முயற்சி பகுத்தறிவு-மிகவும் உடையோர்க் கன்புத் தாயாவார்! இறைத்துப் பாய்ச்சும் தண்ணிர் போல்-அவர் எழுச்சிக் கருத்தும் பயன்தருமே! நரைத்துத் திரைத்து மூத்திடினும்-தமிழ் நாட்டுக் குழைக்கும் பெரியாரே! நேரிய ஒழுக்கம்: பண்புடைமை-நாட்டில் நிலைபெற் ருேங்க வேண்டுமெனும் சிரிய கருத்தை உடையவராம்-கிழச் சிங்கம் பெரியார் வாழியவே!