பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 25 நாச்சியப்ப! உன்பாடல் நல் ஆடகப் பொன்னாம் பூச்செதற்கு? நாட்டும் புகழ், என விடையிறுக்கலாம். இத்தொகுதியின் இறுதிப் பாடல் மனங் கொளவேண்டிய ஒன்று. எல்லோரும் எழுதிய இயற்கை, காதல் முதலிய பாடுபொருள்களையே இனி நானும் எழுதவோ என வினா எழுப்பி, "அத்த னைக்கும் மேலதாய் அறிஞர் போற்றும் நூலதாய்ப் புத்தம் புதிய பாடலாய்ப் பொருளும் சுவையும் கூடவே மெத்த மெத்த முயன்று நான் விரும்பிப் படைக்கப் போகிறேன் இத்த ரைக்கோர் புதுமையாய் இருக்கும் அந்தக் கவிதையே! (288) என விடை தந்து முடிப்பது, முடியாத வருங்காலம் இவற்றினும் மேலான பாடல்களை என்னிடமிருந்து பெற்றுக் கொள்ளப் போகின்றது எனக் கட்டியங் கூறும் தன்னம்பிக்கை வெளிப்பாடாகும். இந்நம்பிக்கை வெல்வ. தாக! நாச்சியப்ப மணற்கேணியில் நல்ல நல்ல பாட்டுற்றுக்கள் கிளைப்பனவாக! அவற்றால் நாடும் உலகமும் நலம் பெறுவனவாக! என என் விருப்பத்தைச் சொல்லாக்கி விடைபெறுகின்றேன். 24–5–1981 இரா. இளவரசு சென்னை-17