பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 219 பெரியார் வெண்தாடி வேந்தரடி-தமிழர் கொண்டாடும் சாந்தரடி! வெண்தாடி வேந்தரடி! பெரியார் என்றவர் புகழைப் பேசிடுவார் புரியாமல் சிலர் அவரை ஏசிடுவார் வெண்தாடி வேந்தரடி! பெற்ற பிள்ளைக்குப் புத்தி சொல்வது போல பேசிப் பேசியவர் நாளும் உழைப்பது போல மற்றவர் யாரும் உழைத்துக் கண்டதும் இல்லை மாசில்லாதவர் அவர் போல் இங்கினி இல்லை வெண்தாடி வேந்தரடி! எண்ணுங் கருத்தெல்லாம் சொல்லி யகன்றிடு முன்னல் எதையும் சிந்தித்துக் கொள்க என்றுரை சொன்னல் கண்ணுங் கருத்துமாய்த் தன் மானத்தினுக் குழைக்கும் கைத்தடிக் கிழவரின் மெய்யன்ருே பயன் விளைக்கும்! வெண்தாடி வேந்தரடி!