பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 நாச்சியப்பன் பெரியார் வாழ்க! பார்ப்பணியக் கொடுமைகளை வேரறுக்கப் பண்டொருநாள் புத்தனெனும் அறிஞன்தோன்றி ஆர்ப்பரித்தான்! வாலொடுங்கிக் கிடந்து புத்தன் அமைதியுற இயற்கையுடன் கலந்த பின்பு வேர்கிளைத்துச் சூழ்ச்சிஎனும் ஆயு தத்தால் வேலதனத் தொடக்கிற்றுத் துடித்தெழுந்த சீர்த்தமிழர் இடைநின்று ஒளிபரப்பும் செங்கதிர்போல் ஈ.வே.ராப் பெரியார் வந்தார்! நேரெதிர்த்துப் போர்புரியும் மறவர் நம்மை நிர்வாரீர் திறங்காண்போம் என்ற ழைத்துப் போரிடலாம் போரென் ருல் புறங் கொடுக்கும் புல்லர்களைச் சூழ்ச்சியிலே வல்லர் தம்மை நேரெதிர்க்கும் வகையில்லே ஆகை யாலே நிறைமக்கள் மன்றத்தில் பெரியார் வந்து யாரெதிர்த்தும்; கல்லடிக்கும் அஞ்சாமற்ருன் அறிவியக்கம் பரப்புகின்ருர் வாழ்க! வாழ்க! சூழ்ச்சிஎன்றும் மடமைஎன்றும் தமிழ கத்தில் சூழ்ந்துள்ள இருள்கிழிக்கப் புரட்சி என்னும் வாளெடுத்துத் தந்திட்டார். கதிர வன்தன் வருகையினை விளக்கஇருட் கருப்பிடையே தோளெனவே உயர்குன்றின் மேற்கி ளம்பும் தோன்றுகதிர்க் கொடிகாட்டி அழைத்து நின்ருர் நாளெல்லாம் அடிமைஎனும் நிலையைப் போக்க நாம்விரைவோம் பெரியாரின் தலைமை யின்கீழ்!