பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் மதமென்னும் மடமைப்பேய் மக்கள் ரத்தம் மாந்திவரும் நாளையிலும் மதம்வ ளர்க்கும் மதமதப்புக் காரர்களைத் தொலைத்து விட்டு மாபெரிய தமிழ்நாட்டின் தந்தை யாராம்: சிதைவின்றி மக்கள் உயிர்ச் சேத மின்றிச் சென்றிடுவோம் மதத்தினைநம் நாட்டை விட்டு உதைத்தடிப்போம்! யாவருமிங் கொருநி லையில் ஒன்றிடுவோம் என்றவராம் பெரியார் வாழ்க! புராணம் இதி காசமெல்லாம் பொய்யே என்று போதித்தார் உறுதியிலார் அகத்தெ ழுந்த விரோதவினக் களுக்கெல்லாம் விடையிறுத்து விளைந்தசிறு ஐயமெலாம் நீக்கி வைத்தார். புராதனமாம் தமிழகத்தில் இந்தி என்னும் போக்கற்ற மொழிக்கிடமே தேடி ஞர்க்குத் திராவிடத்தின் கைவண்மை காட்டிவிட்டுச் சிறைசென்றும் தமிழ்காத்த பெரியார் வாழ்க! பிறந்ததெலாம் தமிழ்நாட்டில்! உண்ணச் சோறு பெற்றதெலாம் தமிழ்நாட்டில்! எனினும் தாமே திறமுடையார் எனச்சொல்லி வெள்ளை யர்க்கும் தீங்குமிகும் வடவர்க்கும் வால்பி டித்த சிறுநரிகள் செயல்காட்டித் தீயர் ஆட்சிச் சிறுமையினே மனுநீதிப் பாசி சத்தின் உறவுதனை நீக்கிடவே தமிழ கத்தின் உயர்வினுக்கே உழைத்திடுவார் பெரியார் வாழ்க!