பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 223 இயக்கமாய் நின்ற தந்தை பிறவியில் உயர்வு தாழ்வுப் o பிரிவினை எண்ணங் கொண்டோர் உறவினர் ஆக வாழ ஒய்விலா துழைத்த தந்தாய் துறவியின் தோற்றம்; நெஞ்சில் தூயதாம் எண்ணம் வாழ்வின் அறவினை விட்டி யற்கை யடைந்துவிட் டீரே ஐயா! ஐயாவென் நழைக்கும் போதில் யாரென்றே நிமிர்ந்து பார்க்கும் மெய்யான கண்ணில் தோன்றும் மினுமினுப் பொளியில் இந்த வையக மடமை யெல்லாம் வலிவிழந் தொடுங்கிப் போகும்! பொய்யான சாத்தி ரங்கள் பொசுங்கிடும்; எரிந்து போமே! எரித்திடு தமிழர் மாண்டை யிழித்திடு நூலை; வாழ்வை யரித்திடு மடமை தன்னை யழித்திடு; புதிய வாழ்வில் சிரித்திடு மகனே யென்று சிந்தனை தந்த தந்தாய் விரித்திடு மியற்கைத் தாயின் விருத்திலே மயங்கி னிரோ! மயக்கினை யகற்ற வந்தோன் மயங்கியே வீழ்ந்து விட்டால், தயக்கமே காட்டா வீரன் தலையினைச் சாய்த்து விட்டால்,