பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 நாச்சியப்பன் இயக்கமாய் நின்ற தந்தை இயற்கையை யெய்தி விட்டால், துயர்க்கடல் வெள்ள மிங்கே சூழாது விலகிப் போமோ? இருளினை விலக்க வானில் எழுகதிர் சாய்ந்த தேபோல் அருளினை நல்க வந்த அன்புருக் கரந்த தேபோல் உருளுமோர் காலத் தேரின் ஊடுபோய் வீழ்ந்து விட்டீர் பொருளினைப் பெற்றி ழந்தாற் போலுளந் துடிக்கு தையா! ஆயிரம் பிறையைக் காணும் அரும்பெறற் பேறு பெற்றீர் தாயினைப் போலு வந்து தமிழர்கள் திருந்தி வாழ ஒயுதல் இன்றி நாளும் - உழைத்துவாழ் விழிவொ ழிக்கத் துரயறும் உளந்து டித்த துடிப்பினை அளக்கப் போமோ! துடிப்பெலாம் அடங்கி, நெஞ்சச் சூடெலாம் தணிந்து, கையின் பிடிப்பெலாம் தளர்ந்து சாவுப் பேழையுள் ஒடுங்கி விட்டீர்! படிப்பெலாம் மறந்து போமோ, பழந்தமிழ் உணர்வு போமோ, வடிப்பெலாம் அமுத மாக வழங்கினீர் போற்றி வாழ்வோம்!