பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 225 தென்னுட்டின் விடிவெள்ளி அருட்பாவை மருட்பாவென் ருேதி யிங்கே அறிவான திருவிளக்கை ஏற்று வோரை இருட்பாவக் குட்டையிலே அழுத்து கின்ற இரக்கமிலா நெஞ்சத்தார் ஒங்கி வாழ்ந்தார். குறட்பாவும் மக்களிடைப் பரவா வண்ணம் குறுமூடக் கொள்கைகளைப் பரப்பி வந்தார் வறட்பாலை நிலநடுவே சோலை போல வளமாக்கும் அறிவியக்கம் தோன்றிற்றம்மா! தோன்றியதோர் அறிவியக்கத் தந்தை; அன்புச் சுடரொளிரும் திருமுகத்தார்; எளியர் தம்கால் ஊன்றுதற்குத் தெம்டளித்த பெரியார் தம் கை ஊன்றிவரத் தோள்கொடுத் தார் எங்கள் அண்ணு! தான்றமிழன் தான்றமிழன் என்று சொல்லி நாற்றிசையும் உணர்வெழும்பச் சூரைக் காற்றைப் போன்றெழும்பிப் பேரறிஞர் அண்ணு தானே புத்துணர்ச்சிப் பெருமழையைப் பொழியச் செய்தார்! செந்தமிழை அரியணையில் ஏற்று தற்குச் சிந்தையிலே உறுதிகொண்ட தாலே யன்ருே இந்தநிலத் துளளமக்கள் அண்ணு வைத்தம் எண்ணமெனும் அரியணையில் ஏற்றி வைத்தார் மந்தமதி படைத்தவர்கள் பிறமொ ழிக்கே மாநிலத்தை யாளுகின்ற திறனுண் டென்று விந்தைமொழி பேசியதால் வீழ்ந்து விட்டார் விடிவெள்ளி போல் அண்ணு மேலெ ழுந்தார்! தா-15