பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

婉26 தாச்சியப்பன் தன்மக்கள் தன்மக்கள் எனநி னைக்குந் தாய்போலே அன்புடையார் அண்ணு வால்தான் இந்நாட்டுக் கிதுதேவை என்று ணர்ந்தே எழில்வளங்கள் சேர்த்தற்கு முடிந்த தன்ருே? தன்னேடு போகாமல் பொறுப்பு மிக்க தம்பியரைத் தேர்ந்தெடுத்தே ஆள வைத்துத் தென்னட்டின் புகழுயரச் செய்தா ரந்தத் திருச்செல்வர் பெயர்பாடிச் செம்மாப் போமே! அண்ணன் எங்கள் கண்ணன் அண்ணனே எங்கள் கண்ணன் என்பேன்-அவர் அன்பு மொழியே வேத மென் பேன்-புது இதை யென்பேன்-திருப் பாதையென்பேன்! அண்ணனே எங்கள் கண்ணன் என்பேன்! அண்ணனே எங்கள் கண்ணன் என்பேன்! ஏழை உழைப்பவர் ஏற்றம் பெறவே-அவர் இசைத்த தெலாம்புது மறைக ளன்ருே! கோழை கிளர்ந்தெழத் துாண்டிய தெல்லாம்-அவர் கூறிய செழுஞ்சொல் கீதை யன்ருே! - அண்ணனே எங்கள் கண்ணன் என்பேன்! கள்ளப் பார்வையும் குறுகுறு நகையும்-அந்தக் கண்ணனின் கவர்ச்சிச் சொத்துக ளென்பார் உள்ளங் கொள்ளைகொள் செந்தமிழ் உரையும்-நெஞ்சில் உண்மையும் எங்கள் அண்ணனின் சொத்தாம்! அண்ணனே எங்கள் கண்ணன் என்பேன்!