பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்துரை டாக்டர் க. காந்தி உயர்நிலை ஆய்வாளர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை-20 கவிவளமும் கதைவளமும் இருவேறு துருவங்களாகக் கருதப்படும் இந்நாளில் இவ்விருவகை வளமும் ஒருங்கே இணையப்பெற்றுத் தமிழ், தமிழர், தமிழர் பண்பாடு காப்பதே இலக்கியத்தின் கோட்பாடாகக் கொண்டு செய லாற்றிவரும் கவிஞர் நாரா நாச்சியப்பனர் தனது கவிதை முயற்சிக்கு உருவம் கொடுக்கத் தலைப்பட்டதன் விளைவாகக் கவிஞரின் இரண்டாம் தொகுதி தமிழுலகில் உலா வரு கின்றது. பொன்னியில் பிறந்து தென்றலில் தவழ்ந்து இளந்தமினுகக் காலூன்றிய கவிஞரின் வாழ்வு தொழில் நிலையிலும் இலக்கிய வாழ்வாக அமையப் பெற்றிருப்பது மேலும் சிறப்புக்குரியது. இக்கவிதைப் பூங்கா பன்னிற மலர்களால் தொடுக்கப்பட்ட பூமாலையாகப் பாமாலைகளைக் கொண்டு விளங்கக் காண்கிருேம். இலக்கியம் சமுதாயம் சார்ந்ததாக அமைய வேண்டுமென விரும்பிய புரட்சிக் கவிஞர் வழிநின்று பழந்தமிழ் மரபும் பண்பாடும் காத்திருக் கும் பான்மை பாராட்டிற்குரியது. கவிஞர் பல நிலைகளில் பல்வேறிடங்களில் பாடிய கவிதைகளின் தொகுப்பாக இத்தொகுதி அமைந்தாலும் அவற்றில் தமிழரைக் காக்கும் பண்பாட்டு மரபு இழை யோடிச் செல்வதைக் காண முடிகின்றது. கவிஞர் தான் உணர்த்து வந்ததைக் கவிதையில் எந்தளவுக்குச் சிறப்பாக