பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230. தாச்சியப்பன் நிமிர்தோள் நெடுஞ்செழியன் நாட்டு நலமொன்றே நாடிப் பெருந்தொண்டு வேட்டுச் செயல்புரியும் வேங்கைப்புலி இளைஞர் கூட்டத் தொருதலைவன்: கொள்கை மறவன்; உயர் பாட்டுப் பொருளான பண்பார் நெடுஞ்செழியன்! மூடத் தனத்தில் முழுகிக் கிடப்பாரைச் சாடிப் பகுத்தறிவுத் தன்மானக் கொள்கைதனை ஏடு நிறைகொள்ள இல்லம் ஒளிபெருக தாடு வளங்காண நாட்டும் நெடுஞ்செழியன்! அல்லும் பகலும் அயரா உழைப்பாலே எல்லா வகையாலும் இந்தத் தமிழ்நாட்டைக் கல்வி மணங்கமழ்பூங் காவாக்கிக் காட்டுகின்ற சொல்லின் உயர்செல்வன் தாயன் நெடுஞ்செழியன்! கோவேந்தர் பாண்டியரைக் கொண்ட திருவுருவம்! நாவேந்தர் அண்ணுவின் நம்பிக்கைப் பேரிமயம்! பாவேந்தர் பாராட்டும் பைந்தமிழின் பொற்பேழை! மூவேந்தர் பண்பும் முதிர்ந்த நெடுஞ்செழியன்! எந்தை பெரியார் எழிற்கருத்தைக் கேட்போரின் சிந்தை பதியத் தெருத்தோறும் பாய்ச்சிவரும் மைந்தன்: இளந்தாடி என்னும் மணிப்பெயரன் நிந்தைக் கிளையா நிமிர்தோள் நெடுஞ்செழியன்! சாடும் புயற்காற்றைச் சங்கார நாதத்தால் ஒடப் புரியும் உரமபெற்ற நெஞ்சத்தான்! ஓடுநீர் ஒடட்டும் உண்மையே வேல்லுமெனப் பாடுந் தமிழ்ச்சங்கம்! பண்பார் நெடுஞ்செழியன்!