பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 நாச்சியப்பன் வற்ருத களஞ்சியம் ஒளவை டி. கே. சண்முகம் தவஞானச் சங்கரதாஸ் வழியைப் பற்றித் தமிழ்நாட்டில் நாடகமாம் கலேவ ளர்ப்போன் நவஞானந் தமிழரெலாம் பெறுதல் வேண்டி நாடோறும் செயலாற்றும் நல்ல தொண்டன் புவிஞானந் தமிழ்நாட்டில் பெருக வேண்டின் போதனைக்குத் தமிழ்மொழியே சாலு மென்னும் சிவஞானத் தோடிணைந்து தமிழர் வாழத் திருப்பணிசெய் சண்முகத்தை வாழ்த்தாய் நெஞ்சே! கற்றவரைப் பின்பற்றும் கலைஞன், நல்ல கவிஞர்களைப் போற்றுகின்ற சுவைஞன்; தன்னைப் பெற்றவரைத் தவம்பெற்ருர் ஆக்கி விட்ட பெருமைந்தன்; தமிழன்னை பெற்ற செல்வன்; உற்றபெருந் தலைவர்கட்கு நிதி வழங்கும் ஒருவள்ளல்; கூத்தியலாம் தமிழ்க்க லைக்கு வற்ருத ஊற்றனைய களஞ்சி யம்போல் வளஞ்சுரக்கும் சண்முகத்தை வாழ்த்தாய் நெஞ்சே சிங்கமாக் கவிஞன்போல் நடித்தா னென்ருல் செய்யுள் செயும் புலவர்களின் சிறப்புத் தோன்றும் பொங்கிவரும் தேசபக்த வேடம் பூண்டால் புதுக்கிளர்ச்சி இதயத்தில் ஊற்றெ டுக்கும் மங்கையரின் காதலய்ைத் தோன்றும் போதோ மனந்தெளித்து காதலினை உயர்வாய்க் கொள்ளும் தங்கமகள் ஒளவையுருச் சண்மு கத்தில் தமிழ்ச்சிறப்புப் பரிமளிக்கும் வாழ்த்தாய் நெஞ்சே!