பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 233 தம்பிக்கோட்டைக் கணபதி நெஞ்சு துடிக்கிறதே-ஆ எம் நெஞ்சு துடிக்கிறதே! தஞ்சைவள நாட்டில்-உள்ள தம்பிக் கோட்டையில் தோன்றிய கணபதி துஞ்சச் செய்து விட்டார்-அந்தத் தொழிலாளர் தலைவனைத் தூக்கிட்டு விட்டார். கொஞ்சமும் இரக்கமின்றி-வெள்ளைக் கொடியர் இயற்றிய தீமையைக் கேட்டதும் நெஞ்சு துடிக்கிறதே!-மலயா நிகழ்த்திய கொலையின் பயங்கரத்தாலே நெஞ்சு துடிக்கிறதே! பெற்ற தமிழகமும்-அவரைப் பேண வகையின்றிச் சேணுக் கனுப்பியதோ? மற்றந்த மலயாவும்- அவர் மாநிற மேனியின் வேர்வையைக் குடித்ததனல் சற்றுத் தமிழகத்தின்-குருதி தன்னை மாந்திச் சுவைக்க நினைத்ததுவோ? பெற்ற நாட்டரசியலார்-சொன்ன பேச்சையும் மதிக்காமல் தூக்கிட்டு விட்டார்! நெஞ்சு துடிக்கிறதே! சற்றுப் பொறுத்திடுவீர்-திர விசாரித் தறிந்து பின் மெய்யைத் தெளிந்திடுவீர்! குற்றம் செய்வதில்லை-தமிழ்க் குருதி படைத்தவர் கொடியரில்லை என்று கற்றுக் கற்றுரைத்தோம்-மலயா காது கொடுக்கவில்லை; நீதி நிலைக்கவில்லை! முற்றும் துயரத்திலே-நாடு முழுதும் அழுகுரல் எழும்பி யொலிக்கிறதே! நெஞ்க துடிக்கிறதே!