பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 நாச்சியப்பன் வள்ளுவர் காட்டும் ஈகை ஆறுமுக நாவலரோ சமய மாறும் அறியாமை யொழிக்கின்ற அறிவை ஈந்தார்: வீறுமிகு “பாரதியோ தமிழு ணர்ச்சி விளைக்கின்ற ஆய்வுரையாம் அமுதை ஈந்தார்: ஏறுநடை நெடுஞ்செழிய நாவலர்தாம் இழிவகற்றும் தன்மானக் கருத்தை ஈந்தார்: பேறுபேற்ருேம் வள்ளுவர்தம் ஈகை யாலே பெரும்பயனைக் கண்டோமே; இன்பங் கண்டோம்! போர்க்களத்துச் சென்ருெருவன் இறந்தா னென்ருல் புகழுலகு சென்ருனென் றுலகம் போற்றும்: ஆர்க்கின்ற பேருந்தின் விழுந்து மாண்டால் அறியாமைக் கிரையானன் என்றி ரங்கும்; வார்க்கின்ற அம்மையினல் நச்சுக் காய்ச்சல் வந்திறந்தால் விதியென்றே அமைதி கொள்ளும்: வேர்க்கின்ற படியலைந்தும் பசிதீ ராமல் விழுந்திறந்தான் எனுஞ்சொல்லோ நாட்டுக் கீனம்! மாவென்று கத்துகின்ற மாட்டுக் கோர்கை வைக்கோலைப் போடுவது மனத்திற் கின்பம்; காவென்று கரைகின்ற காக்கைக் கோர்கை கலயத்துச் சோறெடுத்து வைத்தல். இன்பம்; ஆவென்று பசியோடு வாசல் தன்னில் அம்மாவென் றழைத்துநிற்கும் ஏழை தன்னைப் பூவென்ற மனத்தோடு குந்த வைத்துப் புதுச்சோறு போட்டனுப்பல் இன்பம்: இன்பம்!