பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 பம்பாய்ப் புயல் ஐயோ பாவம் ஐயோ பாவம் பம்பாய் மக்களே! அங்கே சூரைக் காற்றின் வீச்சில் அதிக நட்டமே! தந்திக் கம்பம் மரங்க ளெல்லாம் சாய்த்துப் போட்டதாம் எந்தப் பக்கத் துாரின் தொடர்பும் இன்றிச் செய்ததாம்! தெருவில் போன பேரை யெல்லாம் து.ாக்கி யெறிந்ததாம் ஒரு தொழிலும் நடக்க விடா(து) ஊதிப் பறந்ததாம்! மரம் விழுந்து மாண்டுபோன மக்கள் மிகுதியாம் உரம் இழந்து மக்கள் வீட்டில் ஒண்டச் செய்ததாம்! போக்கு வரத்து யாவு மங்கே நின்று போனதாம்! பேர்த்து வீட்டுக் கூரை யெல்லாம் பறக்க வைத்ததாம்! நாசியப்பன்