பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 நாச்சியப்பன் படிப்பும் பயனும் பாலும் பழமும் கொண்டுட்டிப் பச்சைக் கிளியை வளர்த்தாலும் நாலு பேச்சுப் பழக்கி வைத்தால் நன்ருயிருக்கும் பயனுண்டாம்! பஞ்சு மெத்தை போட்டுவைத்துப் படுத்துக் கொள்ளப் போனலும் நெஞ்சில் அமைதி கண்டால்தான் நினைப்பில் லாமல் தூங்கிடலாம்! வீட்டைப் பெரிதாய்க் கட்டிவைத்து விளக்குப் போட்டால் போதாது பூட்டிப் போடா தெங்கனுமே புழக்கங் கொள்ள வேண்டுமடா! பணத்தைச் சேர்க்கும் வழிதன்னைப் படித்துக் கொண்ட வாணிகரும் குணத்தைப் பெயரைக் காப்பாற்றிக் கொண்டால் தானே நன்ருகும். பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பாடம் சிறப்பாய்ப் படித்தாலும் தெள்ளிய வாழ்வுக் கிலட்சியமே தேடிக் கொள்ள வேண்டுமடா!