பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g7 உணர்த்தியுள்ளனர் என்பதிலேயே கவிஞரின் கவிதை வாழ்வு எடை போடப்படுகின்றது. அந்நிலையில் நின்று கவிஞரின் கவிதைகளை நோக்கும் பொழுது படிப்போர்க்கு எங்குமே எவ்வித உதவியும் தேவையில்லாமல் கொண்டு சென்றிருப்பது அவரது க வி ைத யி ன் வெற்றிக்குச் சான் ருகும். இலக்கியத்தின் சிறப்புக்குப் பல்வேறு கூறு கள் நின்ருலும் மானுட உணர்ச்சிக்கு முதன்மையளிப்பதில் கவிஞர்களே படைப்பாளர்களுள் முதன்மை பெறுகின்றனர். உள்ளத்து உணர்ச்சி மிக்கவர்களே படைப்பாளராகின்றனர் என்ற கருத்துமுண்டு. அது ஒரு விதத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. சிந்தனைத் தெளிவும் செயல் திறமும் கொண்டு விளங்கும் கவிஞர் பிழைபொறுக்கா நெஞ்சினர். அதனே அவரது கவிதைகளில் அங்கங்கே காணமுடிகின்றது. கவிஞர்கள் சமுதாய உணர்வுடையோராக விளங்க வேண்டும் என்பர் திறய்ைவாளர். கவிஞர் தமிழ்ச் சமுதாய உணர்வுகளைத் தட்டியெழுப்பும் நிலையில் நம்பிக்கையுணர்வூட்டும் வண்ணம் பாடியிருப்பது அவரது முற்போக்குச் சிந்தனையினைத் தெளிவுறுத்தும். தமிழரின் வாழ்க்கை மரபுகளையும் இலக்கிய மரபுகளையும் போற்றிச் சென் றிருப்பதனே இக்கவிதைத் தொகுதியின் பல்வேறு தலைப்புகளிலும் காண முடிகின்றது. கவிதையில் உவமை யின் இடம்பற்றிக் கவிஞர், ஆவியைக் கவர்ந்திழுக்கும் உவமையணியின் அழகெலா மடைந்ததும் எவ்வாருே' என விதந்து பாடுகின்ருர், புராணங்கள் மூடநம்பிக்கை களை வளர்க்கும் சாதனங்கள் எனச் சாடும் போது கவிஞர் பகுத்தறிவு இயக்கத்தின் சார்பாளராகக் காட்சியளிக் கின்ஜர்.