பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் ஏனிந்த மாற்றம்: வாளோச்சி வாளோச்சி வெற்றி வாகை கொண்ட நாளெல்லாம் பற்றி நாளெல்லாம் கதைபேசும் வெற்று நாளான தேனிந்த நாளே? யாருக்கும் வணங்காத தலையே அயலாரின் பணிவேற்கும் நிலைபோய்ப் பாருக்கு ளெல்லார்க்கும் சிலையாய்ப் பணிகின்ற நிலையின்ள்ை ஏனே? வில்லுக்குப் பணியாத வீரன் வீரத்திற் கிருப்பிடக் காரன் புல்லுக்குப் பணிகின்ற நேரம் பொருந்திய தேனிந்த நாளே? தமிழாலே உலகத்தைக் காத்தோன் தமிழிலே இன்பத்தைச் சேர்த்தோன் தமிழென்ற பெருமையை நீத்தேன் தலைகுனிந் தான்பிற மொழிக்கே? வந்தார்க்கு விருந்திட்டு மகிழ்ந்து வாழ்வின்பம் தனிலென்றும் படிந்து சிந்திசைத்துக் கூத்தாடல் மறைந்து சிறுநாய்எச் சிலுக்கின்றேன் சண்டை?