பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242. நாச்சியப்பம் நாரதர் : பாரதத்தில் தேவமொழி பயிலுகின்ருர்-அதைப் பார்க்கும் நல்ல பேறடைந்தேன் பரமாத்மா! ஊருக்கொரு கோயிலுண்டு முன்னாளில்-இன்று சந்துக் கேழு கோயில் கண்டேன் கண்ணுலே-கடல் நீர்கடந்து செல்லும் தபால் தலைகளிலும்-ஆட்சி நிகழ்த்தும் தெய்வம் பலகண்டேன் பரமாத்மா! கீதைதன்னை உலகெங்கும் பரப்பிவரத்-தூரக் கிழக்காப்ரிக்கா செல்லுமொரு கோஷ்டி கண்டேன்! -தெய்வ மேதையினை இந்தியாவின் ஆட்சியாளர்-மிக மிகப்பரப்பும் முயற்சிகண்டேன் பரமாத்மா! ைேதபக்தன், ராஜதந்திரம் மிக்கவராம்-மிகக் கீர்த்திவாய்ந்த கவர்னர் ஜனரல் ஆச்சாரியார் ஆதிமனு நீதிதன்னைப் போதிக்கின்ற-நல்ல ஆர்வங் கண்டு களிப்படைந்தேன் பரமாத்மா! இந்தியாவில் தீவாளித் திருநாளை-மக்கள் எல்லாரும் கொண்டாடும் காட்சிகண்டேன் சந்தேகம் வேண்டாமே மடமைதான்-அங்கே சாஸ்வதமாய் ஆட்சிசெய்யும் பரமாத்மா! (இதைக் கேட்டதும் தெய்வங்கள் மீண்டும் அதிகமாகக் கும்மாளம் போடுகின்றன.)