பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 243 தீப தரிசனம் காற்றையும் தீயையும் தன்வசமாக்கிக் காட்டினர் மேலே நாட்டினேர்-திரு நீற்றையும் மண்ண்ையும் குழைத்து நெற்றியில் தீட்டினர் தமது நாட்டிலே! கண்ட புதுமைக் கங்கே காட்சி சாலைகள் வைத்திடுவார் மக்கள் மொய்த்திடுவார்-இந்தக் கண்டத்தில் உள்ளவர் கடவுளைத் தேடிச் சென்றிடுவார் கூடி நின்றிடுவார்! அரைநொடியில் ஒருபாலம் ஆற்றைக் கடக்க அமைத்திடுவார் படை நடத்திடுவார்-நாம் ஒருதேரைச் செப்பனிட ஆண்டுகள் பல போக்கிடுவோம் நலம் நீக்கிடுவோம்! காசொன்றைப் போட்டால்நம் கனத்தைக் காட்டிடும் இயந்திரங்கள் அங்கே விந்தையில்லை-தம் தேசத்திலே உண்டியலில் காசைப் போட்டால் திருநீற்றையே அள்ளித் தருவார்களே! அருமையாய்ப் பறவைக்கப்பல் ஐநூறு பேரை ஏற்றிச் செல்லும் அதைப் போற்றிநிற்பார்-நாம் திருவண்ணுமலைக் கார்த்திகை தீப தரிசனம் கண்டுநிற்போம் நல்ல மண்டுகள் போல்!