பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 நாச்சியப்பன் தீபாவளித் திருநாள் புரோகிதன் : தேவர்களை மகிழ்விக்கப் பார தத்தில் தீவிரமாய்ப் பூசுரர்கள் செய்து வந்த பாவமிலா யாகத்தைக் கெடுக்க வென்றே பாவிநர காசுரன்தான் வெறிகொண் டானே! கோவையிதழ்ப் பாமாவும் துணிந்து சென்று கொன்றுவிட்டாள் ராக்கதனை வெற்றி கண்டோம், மேவு மிந்தத் திருநாளே ஆண்டு தோறும் மேதினியில் தீவாளி யான தப்பா! காசியிலே கங்கையிலே நீரா டத்தான் கர்மமெலாம் தீர்ந்திடுமாம் சாஸ்தி ரங்கேள். தேசமெலாம் தீவாளி கொண்ட நாளில் தெளிந்திடுநல் லெண்ணெய்நீ ராடி வந்தால் கூசாமல் செய்தகொலைப் பாவங் கூடக் கூண்டோடு போயகலும் புண்ணியந் தான் நேசனைப்போல் தேடிவரும் கங்கையாடும் பலனுந்தான் கிட்டிடுமாம் நிகழ்த்தி னேனே! ெேசல்வன் : நாடெங்கும் தீவாளி என்றே பேச்சு நல்லெண்ணெய் குளித்தவுடன் கோடி கட்டி வீடெங்கும் வாசமுறும் பலகா ரங்கள் - வேண்டுமட்டும் தின்றதன்பின் வெடியெ டுத்தே ஒடுங்கள் எனச்சிறுவர் கைக்கொ டுத்தால் உடனேபட் படாரென்று சத்தங் கேட்கும் ஆடுங்கள் பாடுங்கள் என்று சொல்லி ஆனந்தங் கண்டிடலாம் நல்ல நாளே!