பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 நாச்சியப்பன் செத்தவனின் சவத்தின்மீ தேறி நின்று திருவிழாக்கள் கொண்டாடும் மனித ரெல்லாம், இத்தினமே தீவாளி கண்டு விட்டார் எண்ண எண்ணப் பரிதாபம் தோன்று தையா! வெற்றிவிழாக் கொண்டாடும் தமிழர் நாட்டில் வெட்கமின்றிப் பெண்ணைவிட்டு வீர முள்ள நற்றலைவன் தனக்கொன்ற நாளை யின்று நடத்துகின்ருர் தீவாளித் திருநா ளென்று! கற்ருேரும் மற்ருேரும் தூற்று கின்ற கதையன்ருே? நாகரிகப் பண்பு முண்டோ? சற்றேனும் பொருத்தமுண்டோ, வீரத் தாலே சாதித்த செயலுண்டோ போற்று தற்கே? கவிஞன் : பழுக்கலிலை போலாடை யணிந்து வந்த பண்புடைய தோழனை நான் கேட்டேன், அன்பா! அழுக்குடுத்தி வந்துள்ளாய் ஏன்?வெ ளுப்பார் அகப்படவோ இல்லை?' என்றே. அவன்க முத்துச் சுளுக்கும்வரை சிரித்துவிட்டுச் சொல்லு கின்ருன் 'தோழனே நீ இவ்வுலகில் இல்லை யோ?நெய் முழுக்காடிக் கோடியுடை யுடுத்தி வந்தேன் முதல்தீபா வளியிதுவே அறிக வென்றே. எண்ணெய்முழுக் காடுவார்க்கு நரக மென்னும் இன்னலுல கதுகிடையா தென்று மக்கள் கண்ணமறைத் தோதிடுவார் மதம் வளர்க்கும் காவியுடைப் பாதகர்கள்; அதையே எண்ணித் திண்ணையிலே கிடப்பவனும் தெருவோ ரத்தே தேய்பவனும், ஏங்கிடுவார் தேய்ப்ப தற்கே எண்ணெய்பெறக் காசில்லை தரக வாழ்வை ஏற்பதல்லால் வேறுவழி இல் ைஎன்றே.