பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நாசிசியப்பன் வருங்காலத் தமிழகத்தைக் கனவு காணும் கவிஞரின் போக்கு எழுத்தாளர்களை ஊக்கமூட்டும் நிலையில், 'விலைக்கு வரும் உங்கள் நூல் தமிழ்ச் சிறப்பை விளக்குமெனில் புதுமையெனில் ஆதரித்துத் தலைக்கேற்றித் துக்கிவிடப் பண்டிதர்கள் தாமுதலில் வருங்காலம் தூரத்தில்லை' என நம்பிக்கையுணர்வோடு பாடிச் செல்கின்ருர். தமிழ னிடம் இருந்துவரும் குறைபாடு நல்லது செய்தாரைப் போற்ருமை எனும் பண்பாகும். அப்பண்பு கடிந்து தமிழ்ப் பண்பு காக்கக் கவிஞர், ‘நமை மறவா திருந்தார்க்கு வாழ்வு நாளில் நன்றி செய்ய மறந்துவிட்டோம் இறந்த பின்னும் அமையுமொரு செயல் செய்யா திருந்துவிட்டால் அழகல்ல தமிழ்மகனே மறந்திடாதே" என அறிவுறுத்துகின் ருர். தமிழன் தன் மொழி வளர்ச்சிக் சாகச் செய்ய வேண்டியவற்றை, 'அழைத்துவந்து தமிழறிவைப் புகுத்த வேண்டும் அழகு தமிழ் நடை சிறக்க உழைத்தல் வேண்டும் பிழையில்லாச் செந்தமிழைப் பெருக்க வேண்டும் பேருலகில் தமிழ் முழக்கம் எழுப்ப வேண்டும்” எத்திசையும் உலகரங்கில் முதலிடத்தை நமைப்பெற்ற தமிழ்த்தாய்க்கே நல்கும் வண்ணம் நாட்டிடுமோர் உணர்ச்சியுடன் உழைக்க வாரீர் எனப் பட்டியலிட்டுக் காட்டி அறைகூவல் விடுக்கின் ருர், "புதிய தமிழ்நாடு’ என்ற கவிதையில் கவிஞரின் பகுத் தறிவு எண்ணங்கள் வெளிப் பட்டிருக்கின்றன. புரட்சியின் தொடக்கத்தினைக் கவிஞர், "பொறுமைக்கோர் எல்லையினைக் காணச் செய்தீர் எண்ணுமல் இருந்துவிட்டீர் பொறுமைக் கெல்லை என்ருலே புரட்சிப்போர்த் தொடக்க மென்றே'